மகன், மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை...  கணவன்  பயங்கரம்! 

 
 

திருநெல்வேலி மாவட்டம் மானூர் காரைக்குளம் சர்ச் தெருவில் வசித்து வருபவர் சகாரியா. 66 வயதான இவரது  மனைவி மெர்சி. இந்த தம்பதிக்கு ஹென்றி, ஹார்லி பினோ என 2 மகள்,  ஹெலன் என்ற ஒரு மகளும் உள்ளனர். ஹார்லி பினோ அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து  வந்தார். சகாரியாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மெர்சி தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் அதே தெருவில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார்.  இதனால் சகாரியா மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

ஆகஸ்ட் 21ம் தேதி மூத்த மகன் ஹென்றிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் சகாரியாவிற்கு உடன்பாடு இல்லை எனத் தெரிகிறது.   இதனால் மெர்சியும் தனது மகனின் திருமணத்திற்கு சகாரியாவை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கடும் ஆத்திரத்தில் இருந்த நிலையில் ஹார்லி பினோ தனது தந்தை சகாரியா வசித்து வரும் வீட்டில்   தனது துணி மற்றும்  உடைமைகளை எடுத்து வருவதற்காக  புறப்பட்டு சென்றுள்ளார்.  மெர்சியும் தனது மகனுக்கு பாதுகாப்பிற்காக பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
தாய்-மகன் இருவரும் சகாரியாவின் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த சகாரியா, தனது மனைவி, மகனை நேரில் பார்த்த உடனே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  2 பேரும் தங்களின் உடைமைகளை எடுக்க முயன்றனர்.  

ஆத்திரமடைந்த சகாரியா, தனது மனைவி, மகனை பிடித்து இழுத்து ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு கதவை பூட்டிவிட்டார். இதையடுத்து   சகாரியா  வீட்டில் இருந்த கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து ஜன்னல் வழியாக ஹார்லி பினோ, மெர்சியை அடைத்து வைத்துள்ள அறைக்குள் ஊற்றினார். மரண பயத்தில் இருந்த இருவரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். எதையும் காதில் வாங்காத சகாரியா, பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.


அறை முழுவதும் தீப்பிடித்து, ஹார்லி பினோ, மெர்சியின் உடலிலும் தீ பரவியது.  இருவரும் அலறிக்கொண்டிருந்த நேரத்தில், சகாரியாவும் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இவர்கள் 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்  பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்துவிட்டு  படுகாயங்களுடன் கிடந்த ஹார்லி பினோ, மெர்சி மற்றும்   சகாரியா என 3 பேரையும் மீட்டு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மெர்சி, ஹார்லி பினோ ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சகாரியாவுக்கு அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து  போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?