undefined

விண்வெளி பயணம்..  சுற்றுலா முடித்து வெற்றிகரமாக திரும்பினார் முதல் இந்தியர்!

 

ப்ளூ ஆர்ஜின் விண்வெளி சுற்றுலாவில் முதன்முறையாக இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளார். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்வைத்துள்ளன. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் , எலன்மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ரிச்சர்ட் பிரான்சின் விர்ஜின் கால்டெக் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான புளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் 6 பேர் கொண்ட குழு 7வது முறையாக நேற்று மாலை விண்வெளிக்கு பயணம் செய்தது. ஆந்திராவை சேர்ந்த 30 வயது பைலட் கோபிசந்த் தோட்டகுரா விண்வெளி சுற்றுலா மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். இந்தக் குழுவில் அமெரிக்காவின் முதல் கறுப்பின விண்வெளி வீரரான முன்னாள் விமானப்படை கேப்டன் எட்டோவிடல் உள்ளார்.

அவர்கள் மேற்கு டெக்சாஸில் உள்ள வான் ஹாங் ஏவுதளத்தில் இருந்து நியூ ஷோபார்ட் என்ற ராக்கெட்டில் புறப்பட்டனர். பூமியில் இருந்து 106 கி.மீ தொலைவில் 10 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் செய்தனர். கார்மான்கோடு அருகே ஈர்ப்பு விசையை இழந்து சிறிது நேரம் காற்றில் மிதந்ததால் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீரர்கள் சென்ற கேப்சூல் வெற்றிகரமாக தரையிறங்கியது. ப்ளூ ஆர்ஜினின் சுற்றுலாப் பயணம் மகிழ்ச்சிகரமானதாக இருந்ததாக விமானத்தில் பயணம் செய்து திரும்பிய ஆந்திராவைச் சேர்ந்த கோபிசந்த் தோட்டக்குரா கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!