’மனம் விட்டு பேசுங்கள்’.. ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினருக்கு அறிவுறுத்திய நீதிமன்றம்!
நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கில் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இருவரையும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி பொது அறிக்கை வெளியிட்டார். ஆனால், இது தன்னிடம் ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஜெயம் ரவியுடன் தான் வாழ விரும்புவதாகவும் ஆர்த்தி பதிலளித்துள்ளார்.
இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவருக்கும் இடையே நடந்த சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தற்போது மீண்டும் குடும்பநல நீதிமன்றத்தில் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இருவரையும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!