இன்று ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாலுகா அலுவலகங்களில் இன்று சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒவ்வொரு மாதமும் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் மின்னணு ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது.
மேலும் மின்னணு ரேஷன் கார்டுகளுக்கு உரிய தவறுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இந்த முகாமில் பொதுவினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க