செப்டம்பர் 4ம் தேதி  சிறப்பு ரயில்... வேளாண்கண்ணி மாதா கோவில் திருவிழா ! 

 
 


 
வேளாண்கண்ணி மாதா கோவில் திருவிழா செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.  இதற்காக கேரளா, கர்நாடகம், கோவா மாநிலங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் செர்லபல்லியில் இருந்து வேளாங்கண்ணிக்கு காட்பாடி, திருவண்ணாமலை வழியாக செப்டம்பர் 4ம் தேதி முதல் இருவழியிலும் ஒரு சேவையை வழங்க தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 


அதன்படி, ரயில் 07093 செர்லபல்லி-வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் செப்டம்பர் 4ம் தேதி காலை 8.10 மணிக்கு செர்லபல்லியில் இருந்து நலகொண்டா, மிரியாலகுடா, நடிகோடே, பிதுகுரல்லா, சட்டேனப்பல்லி, குண்டூர், தெனாலி, சீராளா, நெல்லூர், ரேணிகுண்டா வழியாக காட்பாடிக்கு மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு வருகிறது. இங்கிருந்து 1.50 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையை அடைகிறது.

அங்கிருந்து விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை மறுநாள் (செப்டம்பர் 5ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை 10.10 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் ரயில் எண் 07094 ஆக வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு காலை 7.18 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடைகிறது. அங்கிருந்து 7.20 மணிக்கு புறப்பட்டு காட்பாடியை காலை 9.55 மணிக்கு அடையும் இந்த ரயில் மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு செர்லபல்லியை அடைகிறது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?