இன்று முதல் சென்னை - கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில்கள்... கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு!
நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் பெருவிழாவைக் கொண்டாட உள்ள நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரச்யில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. நாளை டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 12.35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாட்களில் மதியம் 12.15 மணியளவில் கன்னியாகுமரியை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறு நாட்களில் அதிகாலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் என்றும் கூறப்படுள்ளது.
இதே போன்று, சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோடு வழியாக கொச்சுவேலிக்கு டிசம்பர் 23 மற்றும் 30ஆம் தேதிகளில் இரவு 11.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என்று தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, மறுமார்க்கத்தில் டிசம்பர் 24 மற்றும் 31ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!