ஸ்ரீகாந்த், கிருஷ்ணா புழல் சிறையில் இருந்து விடுவிப்பு... தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.!
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீதான வழக்கு, சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில், இருவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவின் மீதான விசாரணையில் வழக்கின் தன்மை, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் அளவு, மற்றும் மனுதாரர்களின் குற்றப் பின்னணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் நேற்று முன் தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை அடுத்து, புழல் சிறையில் இருந்து இருவரும் இன்று விடுவிக்கப்பட்டனர்.ஜாமீன் நிபந்தனையாக, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தலா 10,000 ரூபாய் சொந்த ஜாமீனில் கையெழுத்திட வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் இரண்டு நபர்கள் ஜாமீன் கையெழுத்திட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை, இருவரும் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!