undefined

 'SIR’ மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது ... முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்! 

 
 


 தமிழக முதல்வர் ஸ்டாலின்  திருச்சி மாவட்டத்தில்  திருவரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டியின் இல்லத் திருமண விழாவில்  கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். இந்த உரையில் அவர் “எதற்கும் அஞ்சாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதால் 75 ஆண்டுகளாக இளமையுடன் இருக்கிறது திமுக. ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை நேரடியாகச் சந்தித்து வருகிறேன். புதுப்புது யுக்திகளுடன் நம்மை அழிக்க எதிரிகள் முயற்சித்து கொண்டே உள்ளனர்.  மத்திய அமைப்புகள் மூலம் நம்மை மிரட்டலாம் என எண்ணுகின்றனர். அது நடக்காது. 


அதனைத்தொடர்ந்து, “எதிரிகள் புது புது உத்திகளோடு நம்மை அழிக்க அவதாரம் எடுத்து வருகிறார்கள். சிபிஐ, வருமான வரித்துறை போன்ற ஆயுதங்களை எடுத்து மிரட்டினர்.  ஒன்றுமே செய்ய முடியவில்லை. இப்போது S.I.R என்ற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் ஒரு காலும் திமுகவை யாராலும் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் மூலம் திமுகவை அழிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் எடுபடாது “

திமுக மனு தாக்கல் செய்த பிறகு ஏமாற்றுவதற்காக அதிமுகவும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. எஸ்ஐஆர் குறித்து உள்ளபடி அக்கறை இருந்தால் அதிமுக முன்கூட்டியே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். எஸ்ஐஆரை அதிமுக ஆதரித்துக் கொண்டிருக்கிறது. SIR-ஐ எதிர்க்க இ.பி.எஸ்.-க்கு தைரியமில்லை. டெல்லியில் உள்ள பிக்பாஸுக்கு ஆமாம் சாமி எனச் சொல்லித்தான் ஆக வேண்டும்.” எனவும் தெரிவித்தார்.
 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!