குழந்தைகளின் ஒளிமிகு எதிர்காலமே அரசின் குறிக்கோள்... முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து!

 

 

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் குழந்தைகளை போற்றும் விதத்தில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துகளை எக்ஸ் தளத்திலிருந்து பகிர்ந்துள்ளார்.

மேலும், குழந்தைகளின் ஒட்டுமொத்த நலனை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை – 2021’ குறித்தும் அவர் பதிவில் நினைவூட்டினார்.

“உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன்; நீங்கள் வழுக்காமல் தாங்கிப் பிடிப்பேன்; உங்கள் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்; உங்களை பரந்த பார்வை, பகுத்தறிவு கொண்ட உலகக் குடிமக்களாக உயர்த்துவேன்” என்று குழந்தைகளிடம் உறுதியளித்து, அனைவருக்கும் தனது குழந்தைகள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!