undefined

இன்று சென்னையில் 10 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறுகிறது!

 

இன்று சென்னை மாநகராட்சியின் 10 வார்டுகளில்  “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்  நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஆகஸ்ட் 26ம் தேதி திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-12ல் சாத்தாங்காடு நெடுஞ்சாலையில் உள்ள தூய பவுல் மகாஜன மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-53ல் வால்டாக்ஸ் சாலை, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக்கூடம், திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-68ல் பெரியார் நகரில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), 

வார்டு-90ல் 100 அடி சாலை, அவுஸ்திரேலியா எக்ஸ்டென்ஷன், கிரிஸ்டல் பேலஸ் எண் 1961சி, கே.எம். ராயல் மஹால், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-96ல் வில்லிவாக்கம், பரசுராம ஈஸ்வர கோயில் தெருவில் உள்ள வெற்றி மஹால், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-119ல், இராயப்பேட்டை, பேகம் சாஹிப் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயக்கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-133ல் தியாகராயநகர், சோமசுந்தரம் தெருவில் உள்ள சோமசுந்தரம் மைதானம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-155ல், ராமாபுரம், ராயலா நகர் பிரதான சாலையில் உள்ள வள்ளி வடிவேலன் திருமண மண்டபம்,

அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-176ல் வேளச்சேரி 100அடி சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-182ல் கந்தன் சாவடி, சி.பி.ஐ. காலனி, 2வது பிரதான சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சமுதாயக்கூடம் ஆகிய 10 வார்டுகளில் நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பங்கேற்று பயன்பெறும்படி  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?