பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்!
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் வேட்டுவம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாகை மாவட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன. ஷூட்டிங்கின் போது நடந்த விபத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ், ஷூட்டிங் காட்சிக்காக காரில் இருந்து குதிக்கும் ஸ்டண்ட் ஒன்றை செய்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். இந்த துயரமான சம்பவம் திரையுலகிலும், திரையணியில் பணியாற்றும் தொழிலாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து நாகை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தையும், பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்ததா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோகன்ராஜின் மரணம் படப்பிடிப்பு குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்துக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!