விஜய்யின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை ... மா.சுப்பிரமணியன் ஆவேசம்!
தவெக தலைவர் விஜய், தனது முதல் அரசியல் பயணமாக ‘மக்கள் சந்திப்பு’ என்ற பெயரில் நேற்று திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சியில் நடைபெற்ற இந்தப் பயணத்தில், அவர் மக்களைச் சந்தித்து, தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து பேசியுள்ளார். தனது உரையில், தி.மு.க. அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திருச்சியில் நடந்த பிரச்சாரத்தில், விஜய் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார், குறிப்பாக திருச்சி மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பாக பல குறைகளை சுட்டிக்காட்டினார்.
தி.மு.க. அரசு தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. திருச்சியின் வளர்ச்சியில் பல குறைபாடுகள் உள்ளன எனக் குற்றம் சாட்டினார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் “ விஜய் முதலில் தமிழகத்தின் வளர்ச்சி குறித்து முழுமையாக அறிந்து பேச வேண்டும் எனக் கூறிய அவர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உட்பட தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களுக்கு பெரும் பயன் அளித்து வருவதாக வலியுறுத்தினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக இருக்க, தமிழ்நாடு 11.19% வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதாகவும் இது தமிழகத்தின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாடு இரு மடங்கு முன்னேறியுள்ளது. விஜய் போன்றவர்கள் மாநிலத்தின் சாதனைகளைப் படித்து, உண்மைகளை அறிந்து பேச வேண்டும்,” என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் பல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதாகவும், விஜய்யின் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு மாறானவை எனவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களுக்கு பயன் அளித்து வருவதாகவும், இதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளதாகவும் கூறி, விஜய்யின் விமர்சனங்களுக்கு உண்மை தெரியும் எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!