எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் திடீர் மாற்றம்... தெற்கு ரயில்வே!
தவிர்க்கமுடியாத திடீர் பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரு இடையிலான ரயில்கள் செப்டம்பர் 20 முதல் டிசம்பர் 20ம் தேதி வரை பெங்களூரில் ரயில் நிலையத்தில் நிற்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே நாட்களில் கன்னியாகுமரி- பெங்களூரு, தூத்துக்குடி- மைசூரு, சென்னை சென்ட்ரல்- மைசூரு அதிவிரைவு ரயில்களும் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!