undefined

சாலையில் திடீர் நீர்வீழ்ச்சி!!  போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதி!!

 

மழை பெய்தால் திடீரென சாலைகளில் பள்ளங்கள் ஏற்படும். ஆங்காங்கே குளங்கள் போல் தண்ணீர் தேங்கும். இதில் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளே விழுந்து விடுவதும் உண்டு. ஆனால் தண்ணீர் குழாய் உடைந்ததில் பெரும் நீர்வீழ்ச்சி ஏற்பட்டது. அஸ்ஸாம் சாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று பிற்பகல் ராஜ்கர் பகுதியில் தண்ணீர் குழாய் உடைந்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்தனர். முதல்கட்டமாக அந்தப் பகுதியில் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அஸ்ஸாம் அமைச்சர் இச்சம்பவம் குறித்து தமது ட்விட்டர் பதிவில்  “ராஜ்கர் & கௌஹாத்தி காமர்ஸ் கல்லூரி இணைப்புச் சாலையில் நிலைமையை ஆய்வு செய்ய சம்பவம் நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்தேன், அங்கு குடிநீர் குழாய் வெடித்ததால் அருகில் சிறிது சேதம் ஏற்பட்டது” என பதிவிட்டுள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்