என்ஐடி மாணவர் விடுதி மாடியிலிருந்து குதித்து தற்கொலை.... கதறும் பெற்றோர்!
கோழிக்கோடு என்ஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர் தற்கொலைகள் மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா கோழிக்கோட்டில் 3ம் ஆண்டு பி டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் யோகேஷ்வர் நாத் விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இச்சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் யோகேஷ்வர் நாத். இவர் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக யோகேஷ்வர் வீட்டுக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்தார். உடனடியாக குடும்பத்தினர் அலறி அடித்து வார்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், யோகேஷ்வர் விடுதி முற்றத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சமீபத்தில் என்ஐடியில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த கல்வியாண்டில் மட்டும் இங்கு 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!