பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்... ஆசிரியர்கள் அலட்சியம் அம்பலம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் படித்த வந்த 9 வயது சிறுமி அமைய்ரா, பள்ளி கட்டிடத்தின் நான்காம் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த துயரமான சம்பவம் கல்வி உலகில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு முன்பே தன்னை அடிக்கடி தொல்லை செய்பவர்கள் இருப்பதாகவும், ஆசிரியர்களிடம் பலமுறை சொன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் கடந்த நவம்பர் 1ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. பள்ளி வளாகத்திலுள்ள சிசிடிவி காட்சிகளில், சிறுமி ரெயிலிங்கில் ஏறி பின்னர் கீழே குதிப்பது பதிவாகியுள்ளது. உடனடியாக உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் சோதனை செய்து அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அமைய்ராவின் தாய் சிவானி கூறுகையில், “என் மகளை சில மாணவர்கள் சொல்லப்போனால் ஒரு வருடமாகவே தொல்லை செய்து வந்தனர். இதை பற்றி ஆசிரியர்களிடம், வகுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆகியோரிடம் பலமுறை சொல்லியும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. ஓர் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில், ஒரு மாணவன் என் மகளுக்கு ஏதோ சைகை செய்ததைப் பார்த்தேன். இது குறித்து கேட்டபோது, ‘இது கூ எட் பள்ளி; குழந்தை அதைப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று ஆசிரியர் கூறினார்” என்றார்.
மேலும், ஒரு வருடத்திற்கு முன் அமைய்ரா அழுது கொண்டு, “ஸ்கூலுக்கு போக விரும்பவில்லை, தயவு செய்து அனுப்பாதீர்கள்” என்று தாய் பதிவு செய்த ஆடியோவும் ஆசிரியருக்கு அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ந்த நாளில் நான்கு முறை ஆசிரியரிடம் சென்று புகார் கூறியும் உதவி கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.
சம்பவத்துக்குப் பிறகு போலீசார் பள்ளிக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறுமி விழுந்த இடம் சுத்தம் செய்யப்பட்டிருந்ததாகவும், இரத்தக் கறைகள் இருந்த இடம் அழிக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பள்ளி நிர்வாகம் ஆதாரங்களை நீக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் இணைந்த பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைய்ரா மரணத்தில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணம் எனக் கூறி குடும்பம் போலீசில் கடந்த வாரமே வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த விளக்கமும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இணைந்த பெற்றோர் சங்கம், சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்காமல் மௌனமாக இருக்கும் பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பு, பள்ளிகளில் மாணவர்களைத் துன்புறுத்தும் பிரச்சினைகள் குறித்து இந்த சம்பவம் மீண்டும் கவலை எழுப்பியுள்ளது. போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தின் உண்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க