நாளை துவங்குகிறது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை ரூ. 8.4 லட்சம்!
நாளை டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், உலகக் கோப்பை டி20 போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அன்றைய போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை ரூ.8.4 லட்சத்திற்கு விற்பனையாகி வருகிறது.
உலகெங்கிலும் உள்ள முன்னணி கிரிக்கெட் நாடுகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டிகளை மேற்கிந்தியத் தீவுகளுடன் இணைந்து அமெரிக்கா இந்த வருடத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக நடத்த ஆயத்தமாகி வருகிறது.
இந்நிலையில், கிரிக்கெட் விளையாட்டில் பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் 34,000 பேர் போட்டியை அமர்ந்து பார்க்கும் வசதிகள் உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்திற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ள நிலையில், டிக்கெட் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. அதிகாரப்பூர்வ ஐசிசி இணையதளத்தின்படி, நியூயார்க் மைதானத்தில் டிக்கெட் பெறுவதற்காக 6 விதமான பேக்கேஜ்கள் உள்ளன. டயமண்ட் கிளப், கபனாஸ், பிரீமியம் கிளப் லவுஞ்ச்கள், கார்னர் கிளப், பெவிலியன் கிளப் மற்றும் பவுண்டரி கிளப். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைப்பெறும் நாளன்று தற்போது இந்த 6 பேக்கேஜ்களில் மூன்று தொகுப்புகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன.
மிகவும் விலையுயர்ந்த தொகுப்பாக டயமண்ட் கிளப் டிக்கெட் இருக்கிறது. இந்த வகையைத் தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களுக்கு என்னென்ன வசதிகள் வழங்கப்படும் என்று பார்க்கலாம் வாங்க.
இந்த டிக்கெட்டைப் பெறும் பார்வையாளர்களின் இருக்கைகள் விக்கெட்டுக்கு நேரடியாகப் பின்னால் அமைந்துள்ளன. இது உலகக் கோப்பை விளையாட்டின் மிகவும் பிரீமியம் காட்சியைப் பார்க்க உதவுகிறது. இது முழுவதுமாக மூடப்பட்ட, குளிரூட்டப்பட்ட பிரத்யேக கிளப்பில் உள்ள சிறந்த உணவு மற்றும் பானங்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்டிருக்கும்.
இந்த டிக்கெட்டைப் பெறுபவர்கள் கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் பழகுவதற்கான எளிய அணுகலைப் பெறுவார்கள் மற்றும் பிற வசதிகளுடன் போட்டிக்கு முந்தைய கள அணுகலையும் அவர்கள் அனுபவிக்கலாம்.
ஐசிசி இணையதளத்தின்படி, டயமண்ட் கிளப் டிக்கெட்டுகள் 4 வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகையிலும் ஒரு டிக்கெட் விலை சுமார் $10,000 டாலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய பண மதிப்பில் ஒரு டிக்கெட் விலை சுமார் ரூ.8,34,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!