undefined

 

கொடைக்கானலில் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெயில் சதத்தைத் தாண்டி பொதுமக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வெயிலுக்கு உயிர்பலியும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. திருச்சியில் நடுரோட்டில் ரெளடி ஒருவர் துரத்தி கொலைச் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு குரல்கள் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் முதல்வர் ஸ்டாலின் கோல்ஃப் விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், ஓய்வெடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு 5 நாட்கள் பயணமாக சென்றுள்ளார்.

கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கோல்ஃப் மைதானத்துக்கு சென்று கோல்ஃப் விளையாடி மகிழ்ந்தார்.

முதல்வர் ஸ்டாலின் கோல்ஃப் விளையாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளன. தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்ல உள்ளதால் கொடைக்கானலில் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!