நாளை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
நாளை பகல் 12 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பியுள்ள நிலையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (செவ்வாய்கிழமை) நண்பகல் 12 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். திமுக முப்பெரும் விழா, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!