undefined

 மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

 

  இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பண்டித ஜவஹர்லால் நேருவை அடுத்து 3 வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பெருமையை மோடியை சேரும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணியுடன் இணைந்து 3 வது முறையாக ஆட்சியை தக்க வைத்துள்ளார். இவருக்கு உலகத்தலைவர்கள், துறை சார்ந்த வல்லுனர்கள் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.   நரேந்திர மோடி நேற்று இரவு 7.15க்கு 3வது முறையாக  இந்திய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.


இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், பிரதமராக அரசியலமைப்பை நிலைநிறுத்தவும், நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரிக்கவும், கூட்டாட்சியை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மதிக்கவும், நமது ஜனநாயகத்தை பாதுகாக்கவும், உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.   

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!