பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள பேட்டி தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பேட்டி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி முகத்தை நோக்கி I.N.D.I.A கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரையை பேசி வருகிறார் பிரதமர் மோடி.
பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது; பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!