தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று ஓய்வு பெறுகிறார்!
தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றும் சங்கர் ஜிவால், தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகிய இருவரும் இன்று பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள். அவர்கள் இருவருக்கும் இன்று மாலை 4 மணியளவில், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் வழியனுப்பு விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு புதிய டிஜிபி யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய டிஜிபியாக தற்போது யாரும் நியமிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும், அதற்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கடராமனை அரசு நியமிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட டெல்லி போலீஸ் கமிஷனரும், தமிழக காவல்துறையை சேர்ந்தவருமான சஞ்ஜய் அரோரா போலீஸ் ஐ.ஜி. ஆசியம்மாள் மற்றும் தற்போது ஓய்வுபெறும் சங்கர் ஜிவால், சைலேஷ்குமார் யாதவ் ஆகிய 4 பேருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் சார்பில் விரைவில் விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!