ஆகஸ்ட் 15ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு!
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளையும், மதுபான பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4,829 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
அதன்படி தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற விஷேச நாட்களில் மதுபான விற்பனை பல நூறு கோடிகளை தாண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினம் - ஜனவரி 15, குடியரசு தினம் - ஜனவரி 26, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம் - மே 1, சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15, நபிகள் நாயகம் பிறந்த நாள் (மிலாது நபி), காந்தி ஜெயந்தி - அக்டோபர் 2 நாட்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 15ம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003 படி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் / மதுபான கூடங்கள் அனைத்தும் நாள் முழுவதும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!