undefined

உரிய ஆவணமின்றி அபுதாபியில் சிக்கிக்கொண்ட தமிழக இளைஞர்.. பத்திரமாக மீட்ட  இந்திய தூதரகம்!

 

முறையான ஆவணங்கள் இல்லாமல் அபுதாபியில் வேலை பார்த்து வந்த தமிழக இளைஞரை மீட்டு இந்திய தூதரக அதிகாரிகள் தாயகம் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகத்தைச் சேர்ந்த முகமது பாரூக் என்ற இளைஞர், வேலை தேடி விசிட் விசாவில் துபாய் வந்துள்ளார். முறையான ஆவணங்கள் இல்லாமல் அபுதாபியில் உள்ள உணவகத்தில் சேர்ந்தார். ஆனால் உரிமையாளர் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர் தனது கடவுச்சீட்டை திருப்பி தருமாறு கடையின் உரிமையாளரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் உணவக உரிமையாளர் பாஸ்போர்ட் கொடுக்க மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த இளைஞர்  அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தை நாடியுள்ளார்.  இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளரிடம் பேசி பாஸ்போர்ட்டை மீட்டனர். மேலும் இளைஞர் சொந்த ஊருக்கு செல்வதற்கு தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்தனர். அபுதாபியில் இருந்து சென்னைக்கு விமான டிக்கெட்டை இந்திய தூதரகம் வழங்கியது. இதையடுத்து முஹம்மது பாரூக் பத்திரமாக சொந்த ஊருக்கு திரும்பினார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக வருபவர்கள் முறையான ஆவணங்களுடன் வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க முடியும்’’ என்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!