undefined

நிலச்சரிவில் சிக்கிய தமிழர்.. மீட்கப்பட்ட உடல் உறுப்புகள்.. கர்நாடகா புறப்பட்ட குடும்பத்தினர்!

 

கர்நாடக மாநிலம் அங்கோலா அருகே சிரூரு பகுதியில் கடந்த 17ம் தேதி கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சாலையோர டீக்கடை, வீடுகள் புதைந்தன. டீ குடிக்க லாரிகளை நிறுத்திய தமிழகத்தை சேர்ந்த டிரைவர்கள் சிக்கினர். இதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டிரைவர் முருகன், நாமக்கல்லைச் சேர்ந்த சின்னண்ணன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் சரவணன் என்ன ஆனார் என்று தெரியவில்லை.

ஒருவாரம் ஆகியும் சரவணனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் பெரும் வேதனையில் இருந்து வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் சரவணனின் தாயாரின் டிஎன்ஏ மாதிரியை கொண்டு சோதனை செய்யப்பட்டது. உடல் உறுப்புகள் சரவணனுடையது என அவரது குடும்பத்தினர் கூறினர். இந்நிலையில், சரவணனின் தாயார் கர்நாடகாவில் உள்ள அங்கோலாவுக்கு சென்றுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!