செப்டம்பர் 13 முதல் தவெக தலைவர் சூறாவளி சுற்றுப்பயணம்... தேர்தலுக்கு புது வியூகம்!
2026ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தவெக தலைவர் செப்டம்பர் 13, 2025 முதல் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த 10 வார பயணம், தவெகவின் 120 நிர்வாக மாவட்டங்கள் என ஒரு நாளைக்கு இரண்டு மாவட்டங்களை 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி டெல்டா மாவட்டங்களை சூழ்ந்துள்ள விவசாயிகள் பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பிரத்யேக பிரச்சார வாகனம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நாட்கள் தங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
2 மாநில மாநாட்டை தொடர்ந்து விஜய் எப்போது மக்களை நேரடியாக சந்திக்க போகிறார் என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 13 முதல் தமிழ்நாட்டில் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு த.வெ.க தரப்பில் இருந்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!