12000 பேரை பணியிலிருந்து நீக்க டிசிஎஸ் முடிவு... அலறும் ஐடி ஊழியர்கள்!
உலக அளவில் டாடா கன்சல்டன்சி (TCS) நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் இந்நிறுவனத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன் "டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12000 பேர் இந்த நிதியாண்டில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும்வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் ஆவர். ஒட்டு மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் இந்த ஆட்குறைப்பு என்பது வெறும் 2 சதவீதம் மட்டுமே. இது எளிதான முடிவு அல்ல" எனக் கூறியுள்ளார். இந்த பணி நீக்க நடவடிக்கை 2026ம் ஆண்டு நிதியாண்டில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!