அடுத்த 4 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரிக்கும் ... மக்களே உஷார்!
தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். இன்று முதல் ஆகஸ்ட் 28 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இன்று ஆகஸ்ட் 25ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஆகஸ்ட் 26 முதல் 28 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதே நேரத்தில் மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் நாளை ஆகஸ்ட் 26 ம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!