பிரபல டென்னிஸ் வீராங்கனை தந்தையால் சுட்டுக் கொலை!
ஹரியாணா மாநிலம், குருகிராமில் வசித்து வரும் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர், அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடியிருந்தார். இவர் குடும்பத்தினருடன் குருகிராமில் உள்ள செக்டார் 57- பகுதியில் வசித்துவந்த நிலையில், நேற்று ஜூலை 10ம் தேதி வியாழக்கிழமை, அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
49 வயதாகும் தீபக் யாதவ், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் ராதிகாவை சுட்டதில் 3 குண்டுகள் அவரது உடலில் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தி, தீபக் யாதவை கைது செய்த காவல்துறையினர், ராதிகா யாதவ், சொந்தமாக டென்னிஸ் பயிற்சி மையம் நடத்தி வந்தார்.
இது குறித்து ராதிகா, இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுத்துப் போடுவது குறித்தும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் தீபக், தனது கைத்துப்பாக்கியை எடுத்துவந்து மகளை சுட்டுக் கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்தபோது, ராதிகாவின் தாய் மற்றும் அண்ணன் இருவரும் வீட்டில்தான் இருந்தனர். அவர்கள் தான் ராதிகாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். டென்னிஸ் தரவரிசையில் 113வது இடத்தைப் பிடித்திருந்தார். ஹரியானா மாநில அளவில், இரட்டையர் அணியில் 4வது இடத்தில் இருந்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!