undefined

மதுரையில் பயங்கரம்... நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை!

 

நெல்லை  மாவட்டத்தில் கவின் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தின் ரணமே ஆறாத நிலையில், மதுரையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிக் கொலைச் செய்திருக்கிறது கும்பல் ஒன்று.

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேல்கள்ளந்திரியில் வசித்து வருபவர்  செல்லபாண்டி. இவர்  கூலி தொழிலாளராக பணிபுரிந்து  வந்தார். 5  மாதங்களுக்கு முன்பு ஆட்டோ வாங்க சிலரை நம்பி பணம் கொடுத்திருந்தார். ஆனால் அந்த நபர்கள் ஆட்டோவையும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்தனர். இது குறித்து  கடந்த 10 நாட்களுக்கு முன், ‘சிலர் என்னை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்’ என தாயிடம் கூறியுள்ளார்.

நேற்று இரவு, மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் அழைத்த போது செல்லபாண்டி அழகர் கோயில் சாலையில் சென்று விட்டார்.   அவ்வழியே வந்த நால்வர், திடீரென அரிவாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர்.  அவர் உயிர்தப்ப ஓட முயற்சித்த போதும், அருகிலுள்ள மளிகை  கடைக்கு புகுந்தும்  தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து கண்முடித்தனமாக் வெட்டியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  

இது குறித்து   கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செல்லபாண்டியின் உடல் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது தாயார், ” குற்றவாளிகளை கைது செய்யாத வரை உடலை ஏற்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது பணம் சம்பந்தப்பட்ட பழிவாங்கலின் விளைவாக இருந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாடும் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?