undefined

திருச்சியில் பயங்கரம்.. DYFI கிளை தலைவர் மீது கொலைவெறி தாக்குதல்.. பாஜக பிரமுகர் தப்பியோட்டம்!

 

திருச்சி அரியமங்கலம் அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் தவ்பிக். இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளைத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், அப்பகுதியில் சென்றுக்கொண்டிருந்த அவரை சிலர் வழிமறைத்து தாக்கியுள்ளனர். மேலும், அந்த கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்ய முயன்றனர்.

தாக்குதலில் அவர் காயமடைந்த நிலையில், அப்பகுதி மக்கள் திரண்டதால் அந்த கும்பல் தப்பியோடியது. உயிருக்கு ஆபத்தான முறையில் மீட்கப்பட்ட தவ்பிக் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், திருச்சி அரசு பொது தலைமை மருத்துவமனை முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை தலைவரை வெட்டியவர் பாஜக ஆதரவாளர் வினோத் என குற்றம்சாட்டினர். விசாரணையில் இதனை போலீசார் உறுதிப்படுத்தினர்.

அவர்களுக்குள் நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளதாகவும், இதனால் இந்த தாக்குதல் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!