undefined

 கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில்  பயங்கரம்... தேரில் மின்சாரம் தாக்கியதில் 5 பேர் உடல் கருகி பலி!  

 

 

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 16 ம் தேதி கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஹைதராபாத்தில்  உப்பல் காவல் எல்லைக்குட்பட்ட ராமந்தபூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில்  நடந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஊர்வல தேர் மின் கம்பிகளைத் தொட்டதால் திடீரென தீப்பிடித்து, மின்சாரம் தாக்கியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.  இவர்கள் நால்வரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   
உயிரிழந்தவர்களில் கிருஷ்ணா யாதவ் (24), ஸ்ரீகாந்த் ரெட்டி (35), சுரேஷ் (34), ருத்ரவிகாஸ் (39), ராஜேந்திர ரெட்டி (39) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் துப்பாக்கி ஏந்தியவர் ஸ்ரீனிவாஸும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோகுல்நகர் அருகே ஊர்வலம் முடிந்தபின் தேர் உள்ளே தள்ளப்பட்ட போது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தேர் மின்கம்பிகளில் மோதியதும் மின்சாரம் தாக்கியதில் மக்கள் பரிதாபமாக பலியானார்கள். இந்த சம்பவம் கிருஷ்ணாஷ்டமி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?