தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்... 54 உகாண்டா பாதுகாப்பு வீரர்கள் உயிரிழப்பு... சோமாலியாவில் பரபரப்பு!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் உகாண்டா பாதுகாப்புப் படை வீரர்கள் 54 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு, அநாட்டு அரசை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த அமைப்பு, அவ்வப்போது திடீரென சோமாலியா மக்கள் மீதும், ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டு அரசு, எவ்வ்ளவோ போராடியும், இந்த தீவிரவாத அமைப்பினரைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
தீவிரவாதிகளுடனான கடுமையான போராட்டத்திற்கு பின்னர், ராணுவ தளத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், 54 வீரர்கள் உயிரிழந்ததையும் அந்நாட்டு அதிபர் யோவேரி முசெவேனி உறுதிபடுத்தி உள்ளார்.
தீவிரவாதிகள், திடீரென ராணுவ தளத்திற்குள் புகுந்த நிலையில், தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தியதாகவும், உகாண்டா பாதுகாப்பு வீரர்களில் 137 வீரர்களை அவர்கள் கொன்றதாகவும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!