டெஸ்லாவில் ஒரே நேரத்தில் 14000 பேர் பணி நீக்கம் .... எலான் மஸ்க் திடீர் முடிவு !
மின்சார கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் அதிரடியாக 14,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனச் சீரமைப்பின் ஓர் அங்கமாக 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார் சமீபகாலமாக மின்சார கார்களின் விற்பனை குறைந்து கொண்டே செல்வதால் செலவைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக டெஸ்லா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மின்சார வாகனத் தேவையின் மந்தநிலை காரணமாக 10% அதிகமான பணியாளர்களை மீண்டும் குறைக்கும் பணியில் டெஸ்லா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது குறித்து எலான் மஸ்க் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். இதில் டெஸ்லா அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நிறுவனத்தை தயார்படுத்த உள்ளது. இதனால் உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் அதிலிருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் பார்த்து சீரமைத்து வருகிறது.
அதில் செலவுக் குறைப்பும் முக்கியம் என்பதால் 10% இற்கும் அதிகமான பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலானது டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களில் உலக அளவில் பணிபுரியும் ஊழியர்களைக் கவலையடையச் செய்துள்ளது. 2023ல் டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 1,40,473 ஆக இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதன் மொத்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி இருந்தது.
இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவையும் சந்தையும் விரிவடைந்து செல்வதை பயன்படுத்திக்கொள்ள எலான்மஸ்க் திட்டமிட்டுள்ள நிலையில் எலான் மஸ்க் பிரதமர் மோடியைச் சந்திக்கும் இந்திய சுற்றுப்பயணத்தின் போது இத்தகவல் வெளியாகலாம் எனத் தெரிகிறது. வாகன தயாரிப்பில் இந்தியாவின் டெட்ராய்ட் என தமிழ்நாடு அழைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது மின்சார தயாரிப்புக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளும் தமிழகத்தில் நிலவி வருகின்றன. தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு ஆலையை தமிழகத்தில் அமைக்க திவீர முயற்சி நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே நிஸ்ஸான் மோட்டார், ரெனால்ட், ஹூண்டாய், பிஎம்டபிள்யூ போன்ற கார் தொழிற்சாலைகள் உள்ளன.இத்துடன் டெஸ்லா தொழிற்சாலையையும் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கு வர உள்ள எலான் மஸ்க், இந்தியாவில் மின்சார கார் தயாரிப்பு ஆலையை அமைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவையும் சந்தையும் விரிவடைந்து செல்வதை பயன்படுத்திக் கொள்ள எலான்மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
பெட்ரோல் கார் தயாரிப்பு ஆலைகளின் மையமாக திகழும் சென்னையை மின்சார கார் தயாரிப்பு ஆலைகளின் தலைநகராக மாற்ற திமுக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலகின் மிகப்பெரும் கார் தயாரிப்பு நிறுவனங்களின் மின்சார கார் தயாரிப்பு ஆலைகளையும் தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சி செய்து வருவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!