ஆசிரியர் பணிக்கு TET தகுதித் தேர்வு கட்டாயம்... உச்ச நீதிமன்றம் அதிரடி!
உச்சநீதிமன்றம் ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான உத்தரவின் படி ஆசிரியர் பணியில் சேரவும், தொடரவும், மற்றும் பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது 2009ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின்படி, 1 முதல் 8ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் TET தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.தற்போது ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்குள் உள்ள ஆசிரியர்கள் இந்தத் தேர்வு எழுதாமல் பணியைத் தொடரலாம். அதற்கு மேல் பணியாற்ற வாய்ப்புள்ள ஆசிரியர்கள் கட்டாயம் TET-ஐ தேர்ச்சி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அவர்கள் தேர்ச்சி பெறவில்லையெனில் அவர்கள் பணியிலிருந்து வெளியேற்றப்படலாம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்கப்படலாம் என நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சிறுபான்மை நிறுவனங்களில் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா? என விசாரிக்க உயர் அமர்வுக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு, 2011க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் TET தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் சில மாநிலங்களில் விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழ்நாட்டில், சென்னை உயர்நீதிமன்றம் 27.09.2011-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்ச்சி தேவையில்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி கட்டாயம் என உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!