undefined

அதெல்லாம் புரூடா... நம்பாதீங்க... நடிகர் சூர்யா சார்பில் நற்பணி இயக்கம் அறிக்கை! 

 

2026ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. ஏற்கனவே திரைத்துறைக்கு முழுக்கு போட்டு விட்டு நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் களமிறங்குவதாகவும் இதற்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.   இது குறித்து அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா குறித்து சில பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா  களமிறங்கப் போகிறார் என பொய்யான தகவல்கள்  பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும், அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.

சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.  அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி, தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்தச் செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?