undefined

அதகளம்... தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் வாரிசுகள் சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை!

 

நாடெங்கிலும் சிவில் சர்வீசஸ் தேர்வு என்கிற UPSC தேர்வை மத்திய அரசு நடத்துகிறது என்பது தாங்கள் அறிந்ததே இத்தேர்வில், தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் வாரிசுகள் சாதனை படைத்து,  தமிழகத்துக்கு பெயரையும் பெருமையையும் சேர்த்துள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் மத்திய அரசு பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நாடெங்கிலும் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில், அகில இந்திய அளவில் 169வது இடத்தை சத்ரியா கவின் பிடித்தார்.

இவரின் தந்தைதான் தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலராக உள்ள ஜெகந்நாதன். அதேபோல், அகில இந்திய அளவில் 290வது இடத்தை, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அதுல் ஆனந்த் மகள் ஈசானி பிடித்துள்ளார்.

மூன்றாவதாக சென்னை மாநகராட்சி ஆணையராக சில நாட்களுக்கு முன் பதவியேற்றுக் கொண்ட டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் அரவிந்த் 361 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று சும்மாவா சொன்னார்கள். மூவருக்கும் தினமாலை சார்பாக வாழ்த்துக்கள்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!