undefined

உத்தரபிரதேசத்தில் 12 மணி நேர வேலை விதி அமலுக்கு வந்தது... தொழில்துறை வளர்ச்சிக்கான புதிய நடைமுறை!

 

உத்தரபிரதேசத்தில் தொழில்துறை நிறுவனங்களுக்கு தினசரி 12 மணி நேர வேலை நேரத்தை அனுமதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து மாநில அரசு இன்று இதுகுறிய அறிவிப்பை வெளியிட்டது.

புதிய விதிகளின்படி, தொழிற்சாலைகளில் ஒரு தொழிலாளி தினமும் அதிகபட்சம் 12 மணி நேரம் வேலை செய்ய முடியும். எனினும் வாரந்தோறும் 48 மணி நேரத்தை மீறக் கூடாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 மணி நேரம் இடைவெளி இல்லாமல் பணிபுரிய தொழிலாளர்கள் எழுத்து மூலம் சம்மதம் அளிக்க வேண்டும்.

இத்துடன், பெண் தொழிலாளர்கள் இரவு நேர பணிகளில் ஈடுபடுவதற்கு அவர்களது தனிப்பட்ட ஒப்புதல் அவசியம். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழிலிடம் வசதிகள் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இரவு வேலை அனுமதி வழங்கப்படும்.

மேலும், பரிந்துரைக்கப்பட்ட வேலை நேரத்தை மீறி பணிபுரிபவர்களுக்கு இரட்டிப்பு ஓவர்டைம் ஊதியம் அளிக்க வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் உத்தரபிரதேசத்தை தொழில்துறை வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக மாற்றும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான படியே என முதன்மை செயலாளர் அதுல் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலை உரிமையாளர்கள் வரவேற்றாலும், தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலன் மற்றும் நீண்ட நேரப் பணியால் ஏற்படும் உடல், மன அழுத்தங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க