“3வது கல்யாணமும் முறிந்தது...” நடிகை மீரா வாசுதேவன் அதிர்ச்சி அறிவிப்பு!
நான் இப்போ சிங்கிள் தான் என்று தனது 3வது திருமண வாழ்க்கை முறிந்துப் போனதாக அறிவித்துள்ளார் நடிகை மீரா வாசுதேவன். யெஸ்.. ஒளிப்பதிவாளர் விபினை கடந்த 2024, மே 24ம் தேதி நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவதாக திருமணம் செய்திருந்த நிலையில், இவர்களது திருமணம் இரண்டு வருடங்களைத் தொடுவதற்குள் முறிவுக்கு வந்துள்ளது.
இவ்விருவரின் பிரிவு தொடர்பான நடிகை மீரா வாசுதேவனின் பதிலில், “இந்த தருணம் என் வாழ்க்கையின் மிகவும் அமைதியான கட்டமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் இருந்து அவரது திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
மீராவின் தனிப்பட்ட வாழ்க்கையில் இது மூன்றாவது திருமண முறிவு என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அவர் விஷால் அகர்வால் உடன் கடந்த 2005ல் திருமணம் செய்திருந்தார். இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் ஐந்து வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில், 2010ல் இருவரும் பிரிந்தனர்.
அதன் பின்னர் நடிகை மீரா வாசுதேவன், ஜான் கொக்கன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் 2012ல் திருமணம் செய்திருந்த நிலையில், அடுத்த நான்கு வருடங்களில் 2016ல் இருவரும் பிரிந்தனர்.
அந்த திருமண வாழ்க்கையும் முறிந்த நிலையில், அடுத்து மூன்றாவதாக 2024ல் விபினைத் திருமணம் செய்திருந்த மீரா, இப்போது தனது வாழ்க்கையின் புதிய கட்டத்தை “அமைதியுடனும் தெளிவுடனும்” ஆரம்பித்திருப்பதாக கூறி, மூன்றாவது திருமண வாழ்க்கையும் முறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க