பகீர் வீடியோ... ரயில் தண்டவாளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து.... 4 பேர் பலி... 34 பேர் கவலைக்கிடம்... !!
ராஜஸ்தான் மாநிலத்தில் பயணிகளை ஏற்றுச்சென்ற பேருந்து ஒன்றூ ன் தௌசா மாவட்டத்தில் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. இந்த பேருந்தில் மொத்தம் 70க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஹரித்வாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, தௌசா கலெக்டர் அலுவலகம் அருகே அதிகாலை 2.15 மணிக்கு இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில்கள் எதுவும் குறுக்கிடவில்லை.
இந்த விபத்து குறித்துகாவல்துறை மற்றும் ரயில்வேக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தும் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் ரயில்வே ஊழியர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரையும் ஆம்புலன்ஸ்களில் ஏற்றி தௌசா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதன்படி மேலும் 5 பேர் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 4 பேர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தோசா மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!