பாலத்தை இடித்துக் கொண்டு அந்தரத்தில் பறந்த கார்... அதிர்ச்சி வீடியோ!
நீலகிரி மாவட்டம் உதகை - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை பதைபதைக்க வைக்கும் விபத்து ஒன்று அரங்கேறியது. கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஹில்பங்க் பகுதியில் உள்ள பிரபல பெட்ரோல் பங்கிற்குள் வேகமாக நுழைந்து, இரும்புத்தடுப்புகளை இடித்து, அதன் மேல் அந்தரத்தில் பறந்து ரோகிணி நெடுஞ்சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த திடீர் விபத்து அங்கு இருந்த பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
படுகாயமடைந்த சுரேஷ், உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தினால் குறித்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவலை அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து, கவிழ்ந்த காரை ஓரமாக அகற்றி, போக்குவரத்தை சீர்செய்து, விபத்து தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். உதகையில் இடம் பெற்ற இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க