undefined

  

முதல்வருக்கு  ஆஞ்சியோ பரிசோதனை... அமைச்சர் துரைமுருகன் அதிர்ச்சி தகவல்!

 


 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆஞ்சியோ பரிசோதனையில் முதல்வருக்கு அடைப்பு எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாக துரைமுருகன் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வருகிறார். இந்நிலையில், பரிசோதனையின் ஒரு பகுதியாக அவருக்கு ஆஞ்சியோ சோதனை செய்யப்பட்டதாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?