சோகம்... தாயை பிரிந்த குட்டியானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு!
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டியானை, முதுமலை யானைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த சில நாட்களாகவே தாயுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அந்த முயற்சி தோல்வியுற்றதால் யானை குட்டியை, முதுமலை யானைகள் காப்பகத்துக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் குட்டி யானைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்து பால், லாக்டோஜன் உள்ளிட்டவற்றை கொடுத்து வனக் கால்நடை மருத்துவக்குழுவினர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு குட்டி யானை சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!