undefined

தேர்தல் நடந்த மறு நாளே அதிர்ச்சி.. பாஜக வேட்பாளர் திடீர் மரணம்.. கலக்கத்தில் கட்சி தலைமை!

 

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் குன்வர் சர்வேஸ். 72 வயதான இவர் சமீபத்தில் சில தொண்டை பிரச்சனைகளுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.  இந்நிலையில் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

மக்களவை தேர்தலின் மொராதாபாத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.மொராதாபாத் தொகுதியில்  குன்வார் சர்வேஸ் உள்பட 12 பேர் வேட்பாளர்கள் இருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்வார் சர்வேஸ் 2014 முதல் 2019 வரை மொராதாபாத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், குன்வார் சர்வேஸ் குமாரின் மறைவுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!