undefined

  காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் பளார் விட்ட துணை முதல்வர்... வைரலாகும் வீடியோ!

 


கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாருடன் புகைப்படம் எடுக்க முயன்ற தொண்டரை அவர் கன்னத்தில் அறைந்த வீடியோவை பாஜக வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கர்நாடகாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் மாநில கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.பி பிரஜ்வல்  வீடியோ விவாகரத்தை முன்னிறுத்தி  காங்கிரஸ் அங்கு  அரசியல் நடத்துகிறது.  அதற்கு பதிலடியாக காங்கிரஸ் தொண்டரை கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் அறையும் வீடியோவை பாஜக தற்போது வெளியிட்டது


அறை வாங்கியவர் நகராட்சி உறுப்பினர்  அலாவுதீன் மணியார் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த வீடியோவை பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவரான அமித் மாளவியா வெளியிட்டுள்ளார். அவரது  பதிவில், காங்கிரஸ் தொண்டர்கள் இன்னும் காங்கிரசுக்காக பணியாற்ற வேண்டும் என ஏன் விரும்புகின்றனர்? என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
அவர்களுடைய தலைவர்கள் அறைகின்றனர். அவமதிப்பு செய்கின்றனர். போட்டியிட வாய்ப்பு தருவதில்லை. தொண்டர்கள் அனைவரும் ஓரம் கட்டப்படுகின்றனர். ஊழல் பணத்திற்காகவா அவர்களின் பக்கம் நிற்கின்றனர்? சுயமரியாதை இல்லையா? என கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!