undefined

9 வயது மகனை  வாயில் பேப்பரை திணித்து கொலை செய்த தந்தை… கதறித் துடித்த  தாய்!  

 

 மகாராஷ்டிரா மாநிலத்தில்  தானே மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகன் இருந்தான். இதில் கணவன்  குடி போதைக்கு அடிமையாகிவிட்டார். இதனையடுத்து மனைவி தனது மகனுடன் தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் ஜூன் 10ம் தேதி சிறுவன் திடீரென காணாமல் போனான்.  தாயும், உறவினர்களும் உடனடியாக சிறுவனை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அன்றைய தினம் இரவு தந்தையின் வீட்டின் வாசலில் சடலமாக மீட்கப்பட்டான்.

இச்சம்பவம் குறித்து போலீசார்   நடத்திய தீவிர விசாரணையில் தந்தையே பேப்பரை திணித்து சிறுவனை கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது மதுபோதையில் இருந்த சிறுவனின் தந்தை நோட்டு புத்தகத்தில் உள்ள பேப்பரை கிழித்து பந்து போன்று செய்து சிறுவனின் வாயில் திணித்துவிட்டார்.இதனால் சிறுவன்  மூச்சு திணறல் ஏற்பட்டு  பரிதாபமாக உயிரிழந்ததாகத் தெரிகிறது. இசம்பவம் குறித்து  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவனின் தந்தையை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!