undefined

 அதிக பாரத்தால் பாலத்தில் பழுதாகி நின்ற மோனோ ரயில்... ! 

 
 

மகாராஷ்டிரா மாநிலத்தில்  மும்பையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த வாரத்தொடக்கத்தில் இருந்தே  அதிகனமழை கொட்டிய நிலையில், செவ்வாயன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இன்று வெறும் 6 மணி நேரத்தில் மும்பையில் 200 மிமீ மழை பெய்தது. 

கடந்த 24 மணி நேரத்தில் 350 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதனையடுத்து சாலை, ரயில், விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு அதிகமாக மோனோ ரயிலில் கூட்டம் அலைமோதியது. அதிக பாரத்தின் காரணமாக, மின் வடத்தில் பழுது ஏற்பட்டு, செம்பூர் மைசூர் காலனி அருகே மோனோ ரயில் பாதி வழியில் பழுதாகி நின்று விட்டது. 

பழுதான இடம் உயரமான பாலம் என்பதால்  மற்றொரு ரயில் இன்ஜின் மூலம், பழுதான ரயிலை அருகே உள்ள ஸ்டேஷனுக்கு இழுத்து செல்ல முயற்சித்தனர்.  ரயிலின் பிரேக் ஜாம் ஆகி இருந்ததால் ரயில் நகரவில்லை. இறங்க முடியாததால் பயணிகள் பீதியடைந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?