undefined

மரக்கடை அதிபர்  பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை... கள்ளக்காதலால் விபரீதம்...! 

 
 

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கள்ளக்காதல் சண்டை கொலையில் முடிந்தது. மரக்கடை வைத்திருந்த சின்னப்பராஜ் (65) என்பவரை, அவரது காதலி பூமணி (48) தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்னப்பராஜ் திருமணமானவர்; இரு மகள்கள் திருமணமாகி வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். சில ஆண்டுகளாக கணவரை இழந்த பூமணியுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. சமீபகாலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திங்கள் இரவு சின்னப்பராஜ், பூமணியை தனது டூவீலரில் அழைத்துச் சென்று, வழியில் மது அருந்தியபோது கடும் வாக்குவாதம் நடந்தது.

ஆத்திரமடைந்த பூமணி, சின்னப்பராஜை தாக்கி ஓடைக்குள் தள்ளிவிட்டு, உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயங்களுடன் சில அடிகள் தூரம் ஓடிய சின்னப்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் பூமணி தானாகவே போலீசில் சரணடைந்தார். அவிநாசி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!