நெகிழ்ச்சி... பணி ஓய்வு பெறும் உதவியாளரை தனது காரில் அமர வைத்து வழியனுப்பும் புதுக்கோட்டைக் கலெக்டர்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் தபேதாராக அன்பழகன் என்பவர் பணியாற்றி வந்தார். அன்பழகன் நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றார். பல ஆண்டுகளாக பல ஆட்சியர்களுக்கு தபேதாராக புதுக்கோட்டையில் பணியாற்றி வந்தார்.
அப்போது தனது காரின் கதவை ஆட்சியர் திறந்துவிட, காரில் முன்பக்கம் தான் அமரும் இருக்கையில் அன்பழகனை அமர வைத்து கவுரவித்தார். காரின் பின் இருக்கையில் ஆட்சியர் அமர்ந்தார். தொடர்ந்து கார் இயக்கப்பட்டு அடப்பன் வயலில் உள்ள வீட்டில் அன்பழகன் இறக்கி விடப்பட்டார். அங்கு அவரது வீட்டில் ஆட்சியர் கவிதா ராமு பரிசு பொருட்கள் வழங்கி, விருந்தில் பங்கேற்றார். ஆட்சியரின் காரில் தபேதார் வழியனுப்பி வைக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!