undefined

தொடரும் மழை... ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலங்கள் மூடல்!

 

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருவதால், ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் ஊட்டியில் முக்கிய சுற்றுலா தலங்கள் இன்று மூடப்பட்டுள்ளன.

அதன்படி ஊட்டியில், பைன் பாரஸ்ட், ட்ரீ பார்க், தொட்டபெட்டா காட்சி முனை ஆகிய இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி இல்லை என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?